இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா, தமது அணி வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டித் தொடர் 7ஆம் திகதி தொடங்க உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு அவர் தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.
ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடினார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இலங்கை அணியில் அவரும் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் பதிரானாவுக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா பயிற்சி அளிக்கும் புகைப்படங்களையும், ஏனைய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களையும் இலங்கை கிரிக்கெட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Lasith Malinga in action! 🤩#SLvAUS #CheerForLions pic.twitter.com/zzwaseFOTr
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 4, 2022
Training ✔️✔️
Sri Lanka team sweat it out at the training session ahead of the first T20I against Australia. #SLvAUS #CheerForLions pic.twitter.com/KOpgTkmJAn
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 4, 2022