பஞ்சாபில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவின் பெற்றோரைச் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார்.
காவல்துறைப் பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டதும், அதை வெளிப்படையாக அறிவித்ததும் சித்து மூசேவாலா கொலைக்குக் காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மூசேவாலாவின் பெற்றோர் சண்டிகரில் அமித் ஷாவைச் சந்தித்துத் தங்கள் மகனின் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.