திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மூன்று யுவதிகள் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் எமது செய்திச்சேவை கந்தளாய் பொலிஸ் நிலைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
அத்துடன் குறித்த யுவதிகளிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கந்தளாய் நகரிலுள்ள கேக் நிறுவனமொன்றில் இம் மூன்று இளம் யுவதிகளும் வேலை பார்த்து வருவதாகவும் நேற்று (3) மாலையில் வேலைக்குச் சென்றோர் வீடு திரும்ப வில்லை எனவும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், யுவதிகளை கண்டுப்பிடித்துள்ளதுடன். தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட இளம் இராணுவச் சிப்பாய் ஒருவர் எடுத்த விபரீத முடிவு (Photos) |
மட்டக்களப்பில் காணாமல் போன 15 வயது சிறுமி மீட்பு: ஒருவர் கைது |
மேலதிக தகவல்: முபாரக்