லக்னோ: உ.பி.,யை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய்க்கான லேசான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து அச்சிறுமிக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில், யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.
இந்நிலையில் உ.பி.,யில் 5 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டதுடன் தழும்புகள் தோன்றியுள்ளது. இதனையடுத்து இது குரங்கு அம்மை அறிகுறியாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதை தவிர, வேறு எந்த அறிகுறிகளும் சிறுமிக்கு ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த யாரையும் சிறுமி சந்திக்கவில்லை. தற்காப்பு நடவடிக்கையாக அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லக்னோ: உ.பி.,யை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய்க்கான லேசான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து அச்சிறுமிக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.