புல்லட் ரயில் மூலம் வீசப்படும் அணுகுண்டுகள் … மேற்கத்திய நாடுகளைத் தாக்குவதற்காக சீனாவின் பயங்கர திட்டம் வெளியானது

சீனா, தனது அதிவேக ரயில்களில் ஆயிரம் அணுகுண்டு ஏவுகணைகளை பொருத்தி, அந்த ரயிலைக் கொண்டு அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் தாக்க திட்டம் வைத்திருப்பதாக நிபுணர் ஒருவர் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

சீனா உருவாக்கி வரும் திட்டங்களின்படி, போர் உருவாகும் பட்சத்தில், மணிக்கு 220 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடிய அந்த ரயில்கள், சீனா முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ள 23,000 மைல் அதிவேக ரயில்பாதைகளை பயன்படுத்தி அணுகுண்டுகளை சுமந்து செல்லும் ஏவுகணைகளை வீசுமாம்.

சீன அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகளிலிருந்து இந்த அதிவேக ரயில் மூலம் அணுகுண்டு வீசும் சீனாவின் திட்டம் குறித்து தெரியவந்துள்ளது.

ரயில் மூலம் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இந்த திட்டம் மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று கூறும் சீன இராணுவம் தொடர்பிலான நிபுணரான Rick Fisher என்பவர், அது தொடர்பான விடயங்களை தயாரிப்பது சீனாவுக்கு கடினமல்ல என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, சோவியத் யூனியன், வட கொரியா ஆகிய நாடுகள் ரயில் மூலம் ஏவப்படும் அணு ஆயுதங்களை சோதனை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புல்லட் ரயில் மூலம் வீசப்படும் அணுகுண்டுகள் ... மேற்கத்திய நாடுகளைத் தாக்குவதற்காக சீனாவின் பயங்கர திட்டம் வெளியானது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.