தூத்துக்குடியில் வீடு கட்டும் பணியின் போது அருகில் இருந்த பழைய சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
டி.ஆர்.நாயுடு தெருவில் பாலு என்பவரின் புதிய வீடு கட்டும் பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.