Tami Health Drinks For Diabetes Patients : கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை மனதில் வைத்து பலரும குளிர் பிரதேசத்தை நோக்கிய படை எடுப்பார்கள். இன்னும் சிலர் குளிர்ச்சியான பானங்களை தங்களது உணவுப்பட்டியலில் முன்னணியில் வைப்பார்கள். ஆனால் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் குளிர்பாணங்களை எடுத்துக்கொள்ளும்போது அதிக கவனம் தேவை.
குளிரூட்டிகள், பழச்சாறுகள் மற்றும் பிற பானங்கள் போன்ற எதையும் மற்றவர்கள் உட்கொள்ளலாம். ஆனால் இந்த பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களைக் குறைக்க குறைந்த ஜி.ஐ. உள்ள பானங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் பருக வேண்டிய முக்கிய 3 பானங்கள்.
எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீர்
இஞ்சி நீண்ட கால இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது. எலுமிச்சை சாறு மற்றும் துருவிய அல்லது துண்டாக்கப்பட்ட இஞ்சியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
பார்லி நீர்
ஜாவ் என்றும் அழைக்கப்படும் பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிகம் பலன் தரக்கூடியாது. ஏனெனில் இது இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. சிறந்த பலன்களைப் பெற, நீங்கள் இனிப்பு சேர்க்காத பார்லி தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீரில் 94 சதவீதம் தண்ணீர் உள்ளது மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகள் உள்ளன. தேங்காய் நீரில் பொட்டாசியம், வைட்டமின் பி, எலக்ட்ரோலைட்டுகள், அமினோ அமிலங்கள், என்சைம்கள் மற்றும் பல்வேறு தாவர ஹார்மோன்கள் உள்ளன, அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“