கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கையில் பல பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
தயான் ஜயதிலக்கவை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, முதலாவதாக, ரஷ்யாவிலிருந்து சுற்றுலா வருமானம் இழக்கப்படும் என்றும், இரண்டாவதாக, இலங்கைக்கு வழங்க தயாராக உள்ள மலிவான கச்சா எண்ணெய் இழக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடாக ரஷ்யா இருப்பதால், அந்த சந்தையும் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விமானத்திற்கு தடை
ரஷ்ய விமானத்திற்கு தடைவிதித்த நீதிமன்றம்
இதேவேளை, இலங்கையின் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ரஷ்யா கடும் எதிரப்பு
இந்த தடை உத்தரவு வரும் எதிர்வரும் 16ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா கடும் எதிர்ப்பு
எவ்வாறாயினும், விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தூதுவர் ஜனித அபேவிக்ரம லியனகேவை நேற்று அழைத்து இந்த எதிர்ப்பை ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.