மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இன்ஸ்டாவின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல வதிமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய அப்டேட்டில், இன்ஸ்டா ரீல்ஸ் நேரம் அதிகரிப்பு, ரீல்ஸ் டெம்பிளேட் உட்பட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் முன்பு 60 நொடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் தற்போது அதன் நீளத்தை 90 நொடிகளாக அதிகரித்துள்ளது. ஆனால், ரீல்ஸ் போட்டியாளரான டிக்டாக்கில் 10 நிமிடங்கள் வரை வீடியோ பதிவிட முடியும். இன்ஸ்டாவின் ரீல்ஸ் நேரம் அதிகரிப்பு அப்டேட், வீடியோ கிரியேட்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரீல்ஸ் அம்சத்தை பயனர்கள் எளிதாக உபயோகிக்கும் வகையில் புதிய வசதிகளை இன்ஸ்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், புதிய டெம்பிளேட், இன்ட்ராக்டிவ் ஸ்டிக்கர், புதிய சவுண்டு எஃபெக்ட், ஆடியோக்களை சிங்க் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.
புதிய சவுண்டு எஃபெக்டில், ஏர் ஹார்ன், கிரிக்கெட், ட்ரம்ஸ் உட்பட பல எஃபெக்ட் உள்ளது. அதனை, ரீல்ஸ் செய்கையில் பயனர்கள் உபயோகிக்கலாம்.
ஆடியோ சிங்க் வசதி மூலம், குறைந்தது ஐந்து வினாடிகள் நீளமுள்ள எந்த வீடியோவிலிருந்தும் கமண்ட்ரி அல்லது பேக்கிரவுண்டு நாய்ஸை வீடியோவில் சேர்க்க பயனர்களை அனுமதிக்கிறது.
இன்ட்ராக்டிவ் ஸ்டிக்கர், ரீல்ஸ் வீடியோவை சுவாரஸ்யமாக்கிறது. அதில், கருத்துக் கணிப்புகள், வினாடி வினா, எமோஜி ஸ்லைடர் இடம்பெற்றுள்ளது.
எமோஜி ஸ்லைடர் என்பது குறிப்பிட்ட வீடியோவை எந்தளவு பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பதை ஈமோஜி ஸ்லைடர் மூலம் தெரிவிக்க உதவுகிறது.
பயனர்கள் புதிதாக ஒன்றை உருவாக்க மற்றொரு ரீலை டெம்ப்ளேட்டாகப் பயன்படுத்தலாம். அதில், ஒரிஜினல் ரீல்-இருந்து ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்பை முன்க்கூட்டியே வீடியோவில் சேர்த்துக்கொள்ளலாம்.