அனுமதிக்கப்படாத விமானம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தங்கி இருந்த வான்பரப்புக்குள் நுழைந்ததால் அந்தப்பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
அமெரிக்காவின் டெலாவேர் பகுதியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தின் வான்பரப்பிற்குள் சனிக்கிழமை அனுமதிக்கப்படாத விமானம் ஒன்று தவறுதலாக நுழைந்ததை அடுத்து, ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரையும் அந்தப் பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் இரகசிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில், ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இதனால் எத்தகைய ஆபத்தும் ஏற்படவில்லை, மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன, நிலைமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்த பிறகு ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் மீண்டும் அவர்களது ரெஹோபோத் கடற்கரை இல்லத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க இரகசிய பாதுகாப்பு சேவை தெரிவித்த அறிக்கையில், வான்பரப்பிற்கு நுழைந்த விமானம் உடனடியாக பறக்க தடைவிதிக்கப்பட்ட வான்பரப்பில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாகவும், தவறுதலாக விமானம் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுத் தொடர்பாக விமானியிடன் முதற்கட்ட விசாரணை நடத்தி வருவதாகவும், அவற்றில் விமானிக்கு போதுமான வானொலி சிக்னல்கள் கிடைக்கப்பெறவில்லை மற்றும் வெளியிடப்பட்ட விமான வழிகாட்டுதலைகளை விமானி பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளது.
பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனுக்கு வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் பிற விமானங்களுக்கான வழிகாட்டுதல் அட்டவணையை ஒருவாரத்திற்கு முன் வெளியிடும், அதன் அடிப்படையில், அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் 10 மைல்கள் தூரம் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியாகவும், 30 மைல்கள் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்படும்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் வீரர்களை காப்பாற்ற…வானில் பறந்த ரஷ்ய ஜெனரலின் இறுதி நிமிடங்கள்: பரபரப்பு காணொளி
இவ்வாறு இந்த விமான வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழையும் விமானங்கள் அமெரிக்க இராணுவ ஜெட் விமானங்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு ஹெலிகாப்டர்களளால் வழி மறிக்கப்பட்டு அருகில் உள்ள விமான் தளத்திற்கு அழைத்து செல்லப்படும், அங்கு விதிமுறைகளை மீறியதற்காக விமான குழுவிற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவியல் மற்றும் சிவில் சட்ட அடிப்படையில் அபராதங்கள் விதிக்கப்படுவது வழக்கம்.