ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னியின் கைப்பேசியை ஹேக் செய்து பண மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராகப் பணி புரிபவர் கிருஷ்ணன் உன்னி ஆவார். கடந்த 1 ஆம் தேதி அன்று இவரது கைப்பேசி ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஹேக் செய்தவர்கள் அவரது கைப்பேசியில் இருந்த அதிகாரிகள், வி ஐ பிக்கள், பத்திரிகையாளர்கள் என பலருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பி உள்ளனர்.
ஆட்சியரின் முகப்பு படத்துடன் கூடிய வாட்ஸ்அப் எண்ணில் இருந்து அவர் அமேசான் கிஃப் கார்ட் லின்க் அனுப்பி உள்ளனர். அதன் உள்ளே சென்றால் 10 கிஃப்ட் கார்டுகளுக்கு ரூ.10000 வீதம் கிஃப்ட் அனுப்பினால் பரிசு எனக் கூறப்பட்டிருந்தது. இது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிஃப்ட் கார்ட்டில் உள்ள எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
அந்த நபர் இந்தியில் சம்பந்தம் இல்லாமல் பேசியதால் அது மோசடி நபர்களின் கை வரிசை எனத் தெரிய வந்தது. இந்த தகவலை ஆட்சியர் கவனத்துக்கு அதிகாரிஅக்ள் எடுத்துச் சென்றுள்ளனர். காவல்துறையிடம் ஆட்சியர் புகார் அளித்துள்ளார். ஆட்சியர் கைப்பேசி எண்ணை ஹேக் செய்தது மகாராஷ்டிர மாநிலத்தவர் என்பது தெரிய வந்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.