சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நண்பர்களுடன் கடலில் குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை தண்டையார்பேட்டை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஏஜாஸ் (17). இவர், சென்னை ஆர்கே நகர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது நண்பர்களுடன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் குளித்தார்.
அப்போது முகமது ஏஜாஸ் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடலில் இறங்கி தேடியும் முகமது ஏஜாஸ் உடல் கிடைக்கவில்லை.
இதையடுத்து இன்று காலை இராயபுரம் தீயணைப்பு வீரர்கள் கடலில் இறங்கி தேடினர். ஆப்போது முகமது ஏஜாஸ் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நண்பர்களுடன் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM