பாலக்காடு : ரயில் மோதி காட்டு யானைகள் பலியாவதை தடுக்க ‘யானை பயண பாதை’ அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு– – வாளையார் இடையே ரயில் பாதையில் காட்டு யானைகள் ரயில் மோதி பலியான சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக ரயில்வே டிராக்கின் அருகில் காட்டு யானைகள் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்ல பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பாலக்காடு ரயில்வே அதிகாரி கூறியதாவது : கஞ்சிக்கோடு – வாளையார் இடையே உள்ள தண்டவாளத்தின் அருகே ரயில் வருவதை யானைகள் தெரிந்து கொள்ளும்வகையில், முட்புதர்களை அகற்றி யானைகளுக்கு எளிதில் பயணம் செய்ய இப்பாதையை அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஆறு இடங்களில் இப்பணிகள் நடக்கிறது. இவ்வாறு, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
பாலக்காடு : ரயில் மோதி காட்டு யானைகள் பலியாவதை தடுக்க ‘யானை பயண பாதை’ அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு– – வாளையார் இடையே ரயில் பாதையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.