மேட்டூர் அருகே வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், மூன்று சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். இதில் 3 பேர் குன்னூரில் உள்ள வெறிநாய் கடிக்கான மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க சென்றுள்ளதாகவும் இன்னும் சில பேர் மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 சிறுவர்கள் கடுமையான காயங்களுடன் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய் தொல்லையால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும், சிறார்களையும் வெறிபிடித்த நாயிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM