சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக டான்ஜெட்கோ அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் – பள்ளிக்கரணை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவுள்ளது.
தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அதேபோல், மயிலாப்பூரில் சந்தா சாஹிப் தெரு, வி எம் சாலை, பூரம் பிரகாசம் ரோடு, சிவராஜபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.