பாகு,
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்-ஆஷி சோக்சே இணை 16-12 என்ற புள்ளி கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ்-டாரியா டைகோவா ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியா 2 தங்கம், 3 வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தென்கொரியா முதலிடத்தில் இருக்கிறது.
Related Tags :