டெல்லி: உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் 50-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத்-ன் 50-வது பிறந்தநாள் இன்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டது வருகிறது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி யோகி ஆதித்யநாத்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதில் உத்திரபிரதேசத்தின் ஆற்றல்மிக்க முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள், அவரது திறமையான தலைமையின்கீழ் உத்திரபிரதேச மாநிலம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டியுள்ளது.மக்களுக்கு அவர் மக்கள் சார்பான நிர்வாகத்தை உறுதி செய்துள்ளார். மக்கள் சேவையில் வரத்து நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பிரார்த்திக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.