சேலம்: சேலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ஜெயராம் என்ற இளைஞர் பெங்களூருவில் மீட்கப்பட்டார். சேலத்தில் 3 நாட்களுக்கு முன்பு மாளிகைக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், இளைஞர் ஜெயராமனை கடத்தி சென்றனர். கடத்தல் காரர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸ் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். போலீஸ் தங்களை நெருங்கியதை அறிந்த கடத்தல்காரர்கள் பெங்களூருவில் ஜெயராமனை இறக்கிவிட்டு காரில் தப்பினர்.