விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது.
விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் முயற்சியில் பல நாடுகள் இணைந்து இந்த மையத்தை அமைத்து உள்ளன. இதற்கு போட்டியாக, விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை சீனா அமைத்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்வு ஏப்ரல் மாதம் இதற்கான பணிகள் துவங்கின. மொத்தம், 11 முறை விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது.
மாஜி பிரதமர் இம்ரான் மீது தேச துரோக வழக்கு: பாகிஸ்தான் அரசு முடிவு!
இந்தாண்டு இறுதிக்குள் சீன விண்வெளி மையத்தை நிறுவுவதற்கு சீனா திட்டமிட்டு உள்ளது. அதன்படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்கள் விண்வெளிக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளனர். மொத்தம், நான்கு முறை மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டு உள்ளது. அதில், இது மூன்றாவது பயணம்.
தற்போது சென் டாங்க், லியூ யாங்க், காய் ஜூசே ஆகிய விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் அங்கு ஆறு மாதங்கள் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளை கவனிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் மற்றொரு குழு செல்ல உள்ளது. விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றிச் செல்ல ஆறு ராக்கெட்கள் பயணித்துள்ளன.