தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்’ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு. என். சி அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.
இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூன் 04