இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத் போலீசாா் கூறுகையில், பாகிஸ்தானின் தலைநகா் இஸ்லாமாத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான், பானி காலா பகுதிக்கு வருவார் என கூறப்படுவதை அடுத்து அந்த பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவா் அங்கு வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இம்ரான்கானுக்கு சட்டப்படி என்ன பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமோ அது முழுமையாக வழங்கப்படும் என்றும் அதற்கு அவரது பாதுகாப்பு குழுவிடமிருந்து பரஸ்பர ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது என அவா் தொிவித்தாா்.
இம்ரான் கானுக்கு எதுவும் நடந்தால், அதற்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுக்கப்படும். அவா் மீது நடத்தப்படும் தாக்குதல் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். எனவே அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அவாின் உறவினரும், கட்சியை சோ்ந்தவருமான ஹசன் நியாசி என்பவா் தொிவித்தாா்.