திருமணம் என்றாலே பயமாக உள்ளது!- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்ற தனது காதலருடன் ‛லிவிங் டு கெதர்' வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் சாந்தனுவுடன் லிவிங் டு கெதர் உறவுமுறையில் வாழ்ந்து வரும் நீங்கள் அவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அதிர்ச்சி பதில் ஒன்று கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அதில், சாந்தனு மீது நிறைய நம்பிக்கை உள்ளது. அவர் எனது வாழ்க்கையில் வந்த பிறகு ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
முக்கியமாக எங்கள் இருவருக்கிடையே நிறைய விஷயங்கள் ஒத்துப்போகிறது. அதேசமயம் திருமணம் என்று சொன்னாலே எனக்கு பயமாக உள்ளது. அதனால்தான் அது குறித்து இன்னமும் நான் யோசிக்கவில்லை. மேலும் எனது பெற்றோரின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து விட்டதால் நான் அப்படி யோசிக்கவில்லை. திருமணம் என்கிற வாழ்க்கையில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. என்றாலும் ஏதோ ஒரு பயம் மட்டும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் திருமணம் குறித்து நிறைய யோசித்து வருகிறேன் என்று கூறி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.