சுற்றுச்சூழலை காக்க இந்தியா முயற்சி: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகக்குறைவாக உள்ள போதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மண்ணை காப்போம் இயக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பல அரசு திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை கொண்டு செல்கின்றன. கரியமில வாயு வெளியேற்றத்திற்கு வளர்ந்த நாடுகளே காரணம்.மிகப்பெரிய நாடுகள் பூமியின் வளங்களை அதிகளவு சுரண்டுகின்றன. பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகக்குறைவாக உள்ள போதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

latest tamil news

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 மாதங்களுக்கு முன்பே, பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை இந்தியா எட்டியுள்ளது. முந்தைய காலங்களில், மண்ணின் நலம் குறித்து விவசாயிகளுக்கு தெரியாமல் இருந்தது. இந்த பிரச்னையில் இருந்து வெளியே வருவதற்கு, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டைகள் வழங்குவதற்கு மிகப்பெரிய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பட்ஜெட்டில், கங்கை நதி வழித்தடத்தில் இயற்கை வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 20 ஆயிரம் சதுர கி.மீ.,க்கு மேல் வனப்பரப்பளவு அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.