புதிய ரூபாய் நோட்டுகளில் இதுவரை பார்த்திராத நபர்களின் படங்கள் இடம்பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை, இந்திய ரூபாய் நோட்டுகளில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவம் மட்டுமே இடம்பெற்று இருந்த நிலையில், அடுத்து ரிசர்வ் வங்கி அச்சிடும் ரூபாய் நோட்டுகளில் பிற முக்கிய நபர்களின் முகங்கள் இடம்பெறலாம்.
27500 பேருக்கு வேலைவாய்ப்பு.. மிந்திரா அதிரடி அறிவிப்பு..!
ரூபாய் நோட்டுகள்
மத்திய நிதி அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியாகும் ரூபாய் நோட்டுகளைப் போலவே இரவீந்திரநாத் தாகூர் மற்றும் APJ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைக் கொண்ட புதிய சீரியஸ் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம்
மகாத்மா காந்தி-க்கு அடுத்தப்படியாக வங்காளத்தின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர் எனப் பல அடையாளங்களைக் கொண்டு இருக்கும் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரை மத்திய அரசு ரூபாய் நோட்டில் அச்சிட பரிசீலித்து வருகிறது.
அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர் நோட்டில் ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் உட்படச் சில 19 ஆம் நூற்றாண்டின் ஜனாதிபதிகள் உருவப்படங்களைக் கொண்டுள்ளன. இதேபோல் இந்தியாவிலும் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது.
செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்
இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (SPMCIL), காந்தி, தாகூர் மற்றும் கலாம் வாட்டர்மார்க்ஸ் கொண்ட இரண்டு தனித்தனி ரூபாய் நோட்டு மாதிரிகளை ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
திலிப் டி ஷஹானி
இரண்டு செட்களில் இருந்து பாதுகாப்பு காரணிகளைப் பூர்த்திச் செய்ய ஏதுவான ஒன்றைத் தேர்வு செய்து அவற்றை அரசாங்கத்தின் இறுதி பரிசீலனைக்குச் சமர்ப்பிக்குமாறு ஷஹானியிடம் ரிசர்வ் வங்கி – நிதி அமைச்சகம் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
பத்மஸ்ரீ விருது
வாட்டர்மார்க்குகளை ஆய்வு செய்யும் பேராசிரியர் ஷஹானி, மேலும் இவர் எலக்ட்ரோமேக்நெட்டிக் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த ஆண்டு ஜனவரியில் மோடி அரசால் அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
9 ரிசர்வ் வங்கி உள் கமிட்டி
2017 ஆம் ஆண்டில், புதிய தொடர் ரூபாய் நோட்டுகளுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்களைப் பரிந்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்பது ரிசர்வ் வங்கி உள் கமிட்டிகளில் ஒன்று, 2020 ஆம் ஆண்டில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
2000 ரூபாய் நோட்டு
இதில் காந்தியைத் தவிர தாகூர் மற்றும் கலாமின் வாட்டர்மார்க் முகம் கொண்ட ரூபாய் நோட்டுகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முன்மொழிந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது.
RBI, Finance ministry discuss on Using Rabindranath Tagore, APJ Abdul Kalam images On rupee notes
RBI, Finance ministry discuss on Using Rabindranath Tagore, APJ Abdul Kalam images On rupee notes ரூபாய் நோட்டில் இரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்.. ஆர்பிஐ – நிதியமைச்சகம் திட்டம்..?!