பான் இந்தியா படத்தை இயக்கும் உபேந்திரா
கன்னட சினிமாவில் பல வருடங்களாக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனது ரசிகர் வட்டாரத்தை எங்கும் நகரவிடாமல் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் உபேந்திரா. அதுமட்டுமல்ல ஒரு இயக்குனராகவும் விதவிதமான ஜானர்களில் இதுவரை கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கியுள்ளார் உபேந்திரா. இந்த நிலையில் அவர் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி நடிக உள்ளதாகவும் அது பான் இந்தியா படமாக உருவாகும் என்றும் உபேந்திரா கூறியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் இந்த படத்தின் துவக்க விழா நிகழ்வு நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் சிவராஜ்குமார், சுதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கில் உருவாகும் சில பிரபல ஹீரோக்களின் படங்கள் பான் இந்தியா என்கிற முத்திரையுடன் தான் உருவாக ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.