பிரதமர் வருவதால் பழுது பார்க்கப்படும் சாலைகள்| Dinamalar

மைசூரு : யோகா தினத்தன்று, மைசூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால், பள்ளம் ஏற்பட்ட சாலைகள், அவசர, அவசரமாக பழுது பார்க்கப்படுகின்றன. மாதக்கணக்கில் அபிவிருத்தி காணாத சாலைகளுக்கு, இப்போது அதிர்ஷ்டம் வந்துள்ளது.மத்திய ஆயுஷ் துறையும், மத்திய அரசும் மைசூரில், யோகா தினம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவரை வரவேற்க மைசூரு தயாராகிறது.

சாலை பள்ளங்கள் சரி செய்யப்படுகிறது. 15 கோடி ரூபாய் செலவில், சாலைகள் பழுது பார்க்க, மாநில அரசிடம், மாநகராட்சி கோரிக்கை விடுத்தது. இதற்கு அரசும் அனுமதியளித்ததால், மாநகராட்சி பணிகளை துவங்கியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மைசூரு அரண்மனை முன்பகுதியில், சர்வதேச யோகா தினம் நடக்கும். ஜூன் 21ல் பல்வேறு யோகாசனங்களை செய்து, இதன் மகத்துவத்தை பிரதமர் உணர்த்துவார்.எனவே அரண்மனை சுற்றுப்பகுதியின், பிரதான சாலைகள், பிரதமர் வரும் சாலைகள் பழுது பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கணக்கில் பழுது காணாமல், தொய்வடைந்த சாலைகளுக்கு அதிர்ஷ்டம் வந்துள்ளது.மைசூரு மாநகராட்சி கமிஷனர் லட்சுமி காந்த ரெட்டி கூறியதாவது:ஜூன் 21ல், நகரின் இதய பகுதியில், சீர் குலைந்த சாலைகளை பழுது பார்க்கும் பணிகள் நடக்கிறது. மழைக்காலம் முடிந்த பின், மற்ற சாலைகள் பழுது பார்க்கப்படும்.பிரதமர் நரேந்திர மோடி, அரண்மனை வளாகத்தில், யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதால், அரண்மனை சுற்றுப்பகுதிகளின் சாலைகளை, சரி செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.