ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த அமர் காவல் நிலையப் பகுதியில் உள்ள தாதா பாரி அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் 9 வயது சிறுமியின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் சிறுமின் கழுத்தை ெநரித்து கொன்றுள்ளனர். சிறுமியின் உடலில் ஆடைகள் ஏதும் இல்லை. சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம். எனினும், பிரேத பிரிசோதனை மருத்துவ அறிக்கை வந்த பிறகே உறுதி செய்யப்படும். தற்போது சிறுமியின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. சிறுமி பெற்றோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தங்களது மகள் திடீரென மாயமானதாக தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.