கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக உருமாறியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த பதிவுகளாகவே தெரியும் அளவுக்கு தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத இயக்குநராகவும் லோகி (ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது) உயர்ந்திருக்கிறார்.
விக்ரம் 1986, கைதி, விக்ரம் 2022, கைதி 2, விஜய் 67 என அனைத்து கதைக்களத்தையும் ஒருங்கிணைத்து லோகி யூனிவெர்ஸ் என அழைத்து அதன் லிங்க் லீடையும் குறிப்பிட்டு ரசிகர்கள் தங்களது எதிர்ப்பார்ப்பை ஆவலுடன் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யின் 67வது படத்தையும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்கவிருக்கிறார். இது தொடர்பாக அண்மையில் அவரது பெற்றோர் ஒரு பேட்டியில் அளித்திருந்த பதில்தான் விஜய் மற்றும் லோகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் லோகேஷ் கனகராஜ் பெற்றோரின் பேட்டி:
அதில், எனக்கு ஒரு அண்ணன் இருக்காரு அது விஜய்தான் என எப்போதும் சொல்வார் என லோகேஷின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள். அப்போது விஜய் 67 குறித்து கேட்ட போது, “பன்றேனு சொல்லியிருக்காங்க. வொர்க்லாம் போயிட்டு இருக்கு. ” லோகேஷின் தாயார் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு, லோகி யூனிவர்ஸில் விஜய் 67ம் வர வேண்டும் என பெறுத்த ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இதுபோக, விஜய் 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய் – சமந்தா ஜோடி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.