நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு – ரூ.5 லட்சம் நிவாரணம்

கடலூர்:
டலூரில் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். இவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், கெடிலம் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.