வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கி இருந்த மாளிகை மீது விமானம் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் தீவிரவமாக விசாரித்து வருகின்றனர்.
வாஷிங்டனில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் டெலாவேர் பகுதியில் உள்ள ரெகோபாத் பீச் உள்ளது. இங்கு ஓய்வு எடுப்பதற்காக பைடன் அவரது மனைவியுடன் சென்று தங்கி இருந்தார். இந்நேரத்தில் அவரது மாளிகை மீது ஒரு விமானம் பாதுகாப்பு எல்லையை மீறி உள்ளே நுழைந்தது. இதனையடுத்து உஷாரான விமான படை அதிகாரிகள் விமானத்தை இடைமறித்து திசை திருப்பினர் .
இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு வட்டாரம் கூறியதாவது: ” அதிபர் இருக்கும் இடம் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. தவறான சிக்னல் காரணமாக இந்த விமானம் வந்திருக்கலாம் என தெரிகிறது. விமான வழிகாட்டுதலை பின்பற்றாமல் விமானம் வந்துள்ளது. இருப்பினும் தனியார் விமான பைலட்டிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம் ” என்றனர்.
அதிபர் மாளிகை மீது பறந்த விமானத்தால் பாதுகாப்பு படையினர் சில நிமிடங்கள் பதட்டம் அடைந்தனர்.
Advertisement