நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து காரணமாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ”பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது”எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சர்ச்சை கருத்து காரணமாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், நுபுர் சர்மா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்தால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட மத அமைப்பினா், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் திடீா் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இது இரு மதத்தினா் இடையிலான வன்முறையாக மாறியது. இதையடுத்து இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 800-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: ‘பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது; ஆனால்…’ – அருண் சிங்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM