முஹம்மது நபியைப் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு இன்று காலை பதிலளித்த பாஜக, ‘அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்’ என்றும், ‘எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது’ என்றும் பாஜக கூறியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி, தனது செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தது.
நூபுர் சர்மாவுக்கு எழுதிய கடிதத்தில், பாஜகவின் மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் ஓம் பதக் கூறியிருப்பதாவது: “கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணான கருத்துக்களை நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். மேலும் விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியில் இருந்தும் உங்கள் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முஹம்மது நபியைப் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு இன்று காலை வெளிப்படையாக பதிலளித்த பாஜக, ‘அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்’ என்றும், ‘எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது’ என்றும் பாஜக கூறியுள்ளது.
“பாஜக எந்த மதத்தைச் சேர்ந்த ஆளுமைகளையும் அவமதிப்பதை கடுமையாகக் கண்டிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை” என்று பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறப்படுவதால், பாஜக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
ராசா அகாடமியின் மும்பை பிரிவின் இணை செயலாளர் இர்பான் ஷேக் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் நுபுர் சர்மா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஞானவாபி விவகாரம் குறித்த விவாதத்தில் சர்மா, நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவதூறாக அல்லது தவறாக எதுவும் கூறவில்லை என்று நுபுர் சர்மா மறுத்தாலும், இந்த சர்ச்சை வெடித்ததில் இருந்து தனக்கு கொலை மற்றும் கற்பழிப்பு அச்சுறுத்தல்கள் வருவதாக அவர் கூறினார்.
ஆனால், நுபுர் சர்மாவின் கருத்து, அரசு நிர்வாகப் பிரச்சினைகளில் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ ஃபார்முலாவைப் பற்றி தொடர்ந்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட கட்சியின் தலைமைக்கு “அதிருப்தியும்” “ஏமாற்றமும்” அளித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“