பா.ஜ., பிரமுகரை கொல்ல முயற்சிஇரண்டு இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்| Dinamalar

துமகூரு : பா.ஜ., பிரமுகரை கொல்ல முயன்ற இரண்டு பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.துமகூரு மாவட்ட பா.ஜ., எஸ்.சி., பிரிவு பிரமுகராக இருப்பவர் ஓம்காரேஸ்வர், 40. இவரை, கடந்த ஏப்ரல் 12ல் சிலர் காரை ஏற்றி கொல்ல முயன்றதாக பெங்களூரு மகாலட்சுமி – லே – அவுட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக துமகூரு பொதுப்பணித்துறை உதவி இன்ஜினியர் சம்புகுமார், 36 பெங்களூரு கே.ஆர்.சர்க்கிள் பொதுப்பணித்துறை இன்ஜினியர் அஸ்வினி, 35 ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார். சம்புகுமார் தலைமறைவாக உள்ளார்.இந்நிலையில் இரண்டு பேரையும், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் விஜயலட்சுமி ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.