வெள்ளிக்கிழமையை, அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக பிரகடனப்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் ஒரு கிழமையில் பணிபுரியும் நட்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பாவனையை குறைக்கும் திட்டம்
இதன்படி, அரச ஊழியர்களை வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் கடமைக்கு அழைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் பாவனையை குறைக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் பாவனையை குறைக்கும் வகையில் தேசிய போக்குவரத்துக் கொள்கையொன்றை வகுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.