சென்னை: சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமருக்கு நன்றி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சி கோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் ரவி காஞ்சி கோஷ் கண்காட்சி தொடக்க விழாவில் பாரதத்தின் சனாதன கலாச்சார ஆன்மிகத்திற்கு சேவை செய்வதில் காஞ்சி பீடத்தின் மகத்தான பங்களிப்பை எடுத்துரைத்தார்.
பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள் மற்றும் முனிவர்களால் பிறந்தது என்றும், சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ரவி நன்றி கூறினார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள் மற்றும் முனிவர்களால் பிறந்தது என்றும், சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு மாண்புமிகு ஆளுநர் திரு.ரவி அவர்கள் நன்றி கூறினார். #SabkaSathSabkaVikas pic.twitter.com/44jtdgRuOh