புதுச்சேரியில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள சாலையோரக்கடை வாசலில் இரண்டு குழந்தைகளை கட்டிவைத்து விட்டு பெற்றோர்கள் சென்ற சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
புதுச்சேரியில் முக்கிய பெரிய வணிக நிறுவனங்கள் நிறைந்த மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள ஒரு கடையின் முன்பு இரண்டு குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒரு குழந்தையின் இடுப்பில் கயிற்றால் கட்டப்பட்டு மறுமுனை கடையில் கட்டப்பட்டிருந்தது. இதனை நேரில் பார்த்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதுகுறித்து பெரியகடை காவல் நிலைய போலீசாரிடம் கேட்டபோது, நரிக்குறவர் குடும்பத்தை சார்ந்த சிலர் இதுபோன்று குழந்தைகளை நகர பகுதிக்கு அழைத்து வந்து வியாபாரம் செய்யும் போது சிறுவர்கள் தொலைந்து போய் விடக்கூடாது என்பதற்காக அவர்களை கட்டிவைத்துவிட்டு செல்வதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்களை அழைத்து செல்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுபோன்று தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த புகார் வந்தவுடன் சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து பெற்றோராக இருந்தாலும் குழந்தைகளை கயிற்றால் கட்டி வைக்கக்கூடாது என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாம்: அரக்கோணம்: பிறந்து 40 நாட்களேயான குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM