உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான Moskva கப்பல் தொடர்பில் உண்மையை வெளியிடுவதாக கூறிய நபருக்கு புடின் நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Moskva கப்பலில் பணியாற்றி, உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரரின் தந்தையே தொடர்புடைய சம்பவத்தை அம்பலப்படுத்துவதாக மிரட்டியுள்ளார்.
43 வயதான Dmitry Shkrebets கடந்த பல வாரங்களாக தனியாக போராடி வருகிறார். ஏப்ரல் 14ம் திகதி உக்ரைன் ஏவுகணைக்கு இலக்கான Moskva கப்பல் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், அதில் கொல்லப்பட்ட தமது மகன் 20 வயதான Yegor உட்பட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தீவிரவாத தொடர்பு இருப்பதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறி விளாடிமிர் புடின் நிர்வாகம் அவரை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வருகிறது.
உக்ரைன் ஏவுகணைகளால் தாக்கப்பட்டு Moskva கப்பல் மூழ்கடிக்கப்பட்டது உண்மை தான் என முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
ஆனால் தீவிபத்து காரணமாகவே Moskva கப்பல் கடலில் மூழ்கியதாகவும், சில வீரர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது எனவும் புடின் நிர்வாகம் கூறி வருகிறது.