குடும்ப வன்முறை விவகாரம் கணவர் மீது நடிகை வழக்கு: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

பெங்களூரு, : தனது கணவர் மீது நடிகை சைத்ரா ஹல்லிகேரி (36) வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கிற்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கன்னட நடிகை சைத்ரா, பாலாஜி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மைசூரு ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் தன் கணவர் மற்றும் மாமனார் மீது சைத்ரா கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். அதில், தனது வங்கி கணக்கை பயன்படுத்தி கணவர் குடும்பத்தினர் நகைக்கடன் பெற்றுள்ளதாக கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் அவரது கணவர் பாலாஜி, மாமனார் போத்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாஜி மற்றும் போத்ராஜ் மீது பெங்களூரு ஒயிட்பீல்டு காவல் நிலையத்தில் சைத்ரா புகார் அளித்தார். அதில், கணவர் மற்றும் மாமனார் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பாலாஜியும், அவரது தந்தையும் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுமீதான விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கீழ்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.