Who is protected against monkeypox?,கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்னும் உலக மக்கள் மீண்டு வராதா நிலையில் தற்போது குரங்கு அம்பை பாதிப்பு மக்களை மேலும் பயத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் யாரை குரங்கு அம்மை நோய் தாக்கும் என்ற கேள்வியும். நாம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும். எழுதுள்ளது. இதற்கான விரிவான தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
6 மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் குரங்கு அம்மை தொற்று குழந்தைகளை பாதிக்கவில்லை. மேலும் வயதானவர்கள் குரங்கு அம்மையால் அதிக பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரியமைக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்களை சிறிய நோய் அறிகுறிகளால் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்றும் நோய் பாதிப்பு குறைந்தே காணப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குரங்கு அம்மை தாக்கும் விகிதம் நபருக்கு நபர் மாறுபடும். உலகம் முழுவதிலும் இதுவரை 260 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 21 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருக்கிறதா என்ற ஆய்வு நடத்தப்படுகிறது.
குரங்கு அம்மையால் நோய் உயிரிழப்பை ஏற்படுத்தினாலும் இது ஒரு பெறுந்தொற்றாக மாற வாய்ப்புகள் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குரங்கு அம்மை நோய் அறிகுளிகள் தென்பட 12 நாட்கள் ஆகும் என்பதால் முதல் 5 நாட்ளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோய் ஏற்படலாம் தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.