புவனேஸ்வர் : ஒடிசாவில், தன் அமைச்சரவையை முதல்வர் நவீன் பட்நாயக் மாற்றி அமைத்தார்; இதில், 12 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு அமைந்துள்ளது.
ஐந்து பெண்கள்
ஐந்தாவது முறையாக முதல்வராக உள்ள நவீன் பட்நாயக், 2024ல் நடக்க உள்ள லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.அதன்படி, தன் அமைச்சரவையை அவர் மாற்றியமைத்துள்ளார். அதற்கு உதவும் வகையில், 20 அமைச்சர்களும் நேற்று முன்தினம் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.புவனேஸ்வரில் நேற்று நடந்த எளிய விழாவில், 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 12 பேர் புதுமுகங்கள்; ஐந்து பெண்களும் அடங்குவர்.இவர்களுக்கு கவர்னர் கணேஷி லால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒன்பது பேருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
22 பேர்
விதிகளின்படி, ஒடிசாவில் முதல்வர் உட்பட, 22 பேர் அமைச்சரவையில் இடம்பெற முடியும். முதல் முறையாக, முழுமையான அமைச்சரவையை நவீன் பட்நாயக் அமைத்துள்ளார். இதற்கு முன், ஒரு அமைச்சர் பதவி எப்போதும் காலியாகவே இருக்கும்.
Advertisement