உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் மகன்களாக இருப்பது வரமும், சாபமும் போன்றது என்று, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் எந்த தவறும் செய்யாமலேயே, அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வருகிறார்.
கதவை கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்பதுபோல், அவர் மீது வன்மத்துடன் ஒரு கும்பல் இருந்து வருகிறது.
வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்டிங் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர் ஆன அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வில்லை.
இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கரை அவர் விருப்பப்படி விளையாட விடுங்கள் என்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் பேட்டியில், “அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி ஏன் பேசுகிறார்கள்? சச்சின் மகன் என்பதாலா? சச்சின் டெண்டுல்கரின் மகனாக இருப்பது வரமும் சாபமும் போல் உள்ளது.
தலை சிறந்த பேட்ஸ்மேன் பிராட்மேன் போல ஆட வேண்டும் என்று மற்றவர்கள் அழுத்தம் கொடுத்தால், அதனை தாங்க முடியாமல் அவரின் மகன் தனது பெயரையே மாற்றிக் கொண்டுள்ளார்.
அப்படியான ஒரு அழுத்தத்தை அர்ஜுன் டெண்டுல்கருக்கு தராதீர்கள். அவரை அவரது இயற்கையான ஆட்டத்தை ஆட விடுங்கள். முக்கியமாக அர்ஜுன் டெண்டுல்கரை சச்சின் டெண்டுல்கர் உடன் ஒப்பிடாதீர்கள்” என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
தலைசிறந்த பேட்ஸ்மன்களின் மகனாக இருப்பது வரமும் சாபமும் போன்றது – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ்.!#SachinTendulkar #ArjunTendulkar #KapilDev #Cricket #IPL #BCCI #T20 #Test #OneDay #Sports #MI #Mumbai #Chennai #TamilNadu #TamilNews #Seithipunal pic.twitter.com/J75fPRJ3t4
— Seithi Punal (@seithipunal) June 5, 2022