இந்திய வம்சாவளியை சேர்ந்த பணகார குப்தா சகோதரர்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!


 பணக்கார குப்தா குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்து இருப்பதாக தென்னாப்பிரிக்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு குப்தா சகோதரர்களான அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா என இருவரும் லாபம் அடைந்ததாகவும், நியாமற்ற முறையில் செல்வாக்கை அரசாங்க நடவடிக்கைகளில் செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் குப்தா சகோதரர்களின் செல்வாக்கை உயர்த்த அப்போதைய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவ் உதவியதாக தெரிவித்து எழுந்த நெருக்கடியால் தனது ஒன்பது ஆண்டுக்கால ஆட்சி பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பணகார குப்தா சகோதரர்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது! 

அதன்பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு இதுத் தொடர்பான ஊழலில் அவர்களை நீதிமன்றம் விசாரிக்க தொடங்கிய பிறகு அவர்கள் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடிபெயர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு குப்தா சகோதரர்களை ஒப்படைக்குமாறு தென்னாப்பிரிக்க அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்தநிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு இருப்பதாக தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் பணக்கார குப்தா சகோதரர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தி தென்னாப்பிரிக்கா கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருவதாகவும் தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பணகார குப்தா சகோதரர்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

யார் இந்த குப்தா சகோதரர்கள்:

தென்னாப்பிரிக்காவில் 1993ஆன் ஆண்டு ஏற்பட்ட நிறவெறி வீழ்ச்சிக்கு பிறகு, இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜய், அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகியோர் தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.

முதலில் குடும்பத் தொழிலான சஹாரா கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை அமைத்த குப்தா சகோதரர்கள், பின் 10,000க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தும் வகையில் அவர்களது நிறுவனத்தை வளர்த்துள்ளனர்.

இத்துடன் சுரங்கம், விமானப் பயணம், ஏரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறைகளில் நிதி நலன்கள் என தங்களை வளர்த்து கொண்டனர்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.