நம்பிக்கை வாக்கெடுப்பு.. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி.!!

இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி ஏற்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தை மீறி லண்டனில் பிரதமரின் அலுவலக இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருது வாங்கினார். இதற்கு கண்டனம் எழுந்தது. இதையடுத்து தவறுக்கு மன்னிப்பு கோரினார்.

இதையடுத்து, இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த இரண்டு விவகாரத்தை முன்வைத்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று சொந்தக் கட்சிக்காரர்களே போர்க்கொடி தூக்கினார். 

போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மையான எம்பிக்கள் போரிஸ் ஜான்சனுக்கு கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதின. இதையடுத்து போரிஸ் ஜான்சனுக்கு அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனுக்கு 211 ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 50 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.