எண்ணெய் ஜாம்பவானின் அதிரடி முடிவு.. எகிறி வரும் கச்சா எண்ணெய் விலை.. இனி இந்தியாவின் நிலை?

கச்சா எண்ணெய் விலையானது ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. ஏற்னவே தொடர்ந்து 100 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.

இது எரிபொருட்கள் விலையை சர்வதேச அளவில் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புறம் இதனால் பல நாடுகள் மிக மோசமான பணவீக்க விகிதத்தினை எட்டி வருகின்றது. இதனால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

சும்மா எகிறி வரும் கச்சா எண்ணெய் விலை.. தள்ளுபடியில் எண்ணெய் வாங்கிக் குவிக்கும் இந்தியா..!

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு உள்பட பல நாடுகளின் கரன்சி மதிப்பானது மிக மோசமான சரிவினைக் எட்டியுள்ளது. இதற்கிடையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, காலை அமர்விலேயே கச்சா எண்ணெய் விலையானது பட்டையை கிளப்பி வருகின்றது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 1% அதிகரித்து, 119.83 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 120.64 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது.

சவுதியின் திட்டம்

சவுதியின் திட்டம்

சவுதி அரேபியா ஜூலை மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலையினை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது. இது ஒபெக் நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும், சப்ளை பற்றாக்குறை காரணமாக விலை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ விலை அதிகரிப்பு
 

அதிகாரப்பூர்வ விலை அதிகரிப்பு

சவுதி அதன் அதிகாரப்பூர்வ விலையை ஆசிய நாடுகளுக்கு (official selling price ) 6.50 டாலர்கள் அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 4.40 டாலர் பிரீமியமாக உள்ளது என அராம்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ஓபெக்-கின் திட்டம்

ஓபெக்-கின் திட்டம்

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக் மற்றும் அதன் கூட்டாளர்கள் இணைந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 6,48,000 பேரல்கள் உற்பத்தியினை திட்டமிட்டுள்ளது. இது முன்பை விட 50% உற்பத்தி அதிகமாகும். இப்படி ஒரு நிலையில் தான் சவுதி இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

சப்ளை சங்கிலியில் பாதிப்பு

சப்ளை சங்கிலியில் பாதிப்பு

தற்போது கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ள நாடுகளில், கச்சா எண்ணெய் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உற்பத்தி நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன. எனினும் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை காரணமாக சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது.

இந்தியாவுக்கு பிரச்சனையா?

இந்தியாவுக்கு பிரச்சனையா?

இந்தியாவுக்கு சவுதியின் முடிவால் பிரச்சனையா என்றால் நிச்சயம் பிரச்சனையே. ஒன்று சவுதியிடம் இருந்து இந்தியா கணிசமான எண்ணெய் வாங்கி வருகின்றது. இரண்டாவது சவுதியினை தொடந்து மற்ற நாடுகளும் விலையை அதிகரிக்க முற்படலாம். இதன் காரணமாக அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் அதன் தாக்கம் இருக்கலாம்.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

இதன் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் இன்னும் உச்சம் தொடலாம், இதன் காராணமாக ரூபாயின் மதிப்பானது இன்னும் மோசமான நிலையை எட்டலாம். இது இந்தியாவில் பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம், பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க தூண்டலாம். மொத்தத்தில் இந்தியாவுக்கு இது பிரச்சனையே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Saudi Arabia plans to raise crude oil prices from July

Saudi Arabia plans to raise crude oil prices from July. Meanwhile, the price of crude oil rose again today to more than $ 120.

Story first published: Monday, June 6, 2022, 11:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.