டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் அவரது அலுவலகத்தில் நீண்டகால நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக Orlando Jorge Mera,என்பவர் பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரை சந்திக்க தொழிலதிபரும் நீண்டகால நண்பருமான “Miguel Cruz சென்றுள்ளார்.
பின்னர் திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஒர்லண்டோவை சரமாரியாக 7 முறை சுட்டதில் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார்.