சென்னை: 1,000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு, மீட்பு பயிற்சி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 பேருக்கான பயிற்சியை காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார். கடலில் மூழ்கி தவிப்போரை பாதுகாக்க 14 கடலோர மாவட்டங்களில் 1,000 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.