முருகனுக்கு பரோல் மறுப்பு; மனைவி நளினி மனு வாபஸ்

murugan parole request was dismissed by court ,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதி முருகனுக்கு பரோல் கோரிய மனு தொடர்பாக சிறைத் துறை டிஐஜியிடம் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, அவரவது மனைவி நளினி மனுவை வாபஸ் பெற்றார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது என்றும் இதே வழிக்கில் வேலூர் சிறையில் உள்ள  தனது கணவர் முருகனுக்கு  பரோல் வழக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ காரணங்களுக்காக 6 நாட்கள் பரோலில்  செல்ல அனுமதிக்க கோரி, மே 26 மற்றும் மே 21 ம் தேதி மனு அளித்தோம் என்றும் அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் 6 நாட்களுக்கு முருகனை பரோலில் அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக்கொண்டார்.

நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ், சந்திரா அமர்வு முன் நேற்றைய தினத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. முருகன் மனுதொடர்பாக சிறைத்துறை டிஐஜியிடம் மேல்முறையீடு செய்யும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனால் பரோல் மனுவை வாபஸ் பெறுவதற்கு நளினி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.