கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் செல்வகுமார். ஆயுதப்படை காவலரான இவர் இவர் கடந்த 1-ம் தேதி கடலூர் வந்த அவர் நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ம்ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் விஷமருத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த விசராணை மேற்கொண்டனட். முதற்கட்ட விசாரணையில் குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார்.
ஆனால், புரோ நோட்டை கொடுக்காமல் அவர் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதனால் மன வேதனை அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.