Paytm: மொபைல் ரீசார்ஜ் செய்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேடிஎம்!

Paytm: நாட்டில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ மற்றும் பிற சேவைகளுக்கு கட்டணம் செலுத்தும் தளமாக பேடிஎம் இருந்து வருகிறது. அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் கொண்டுள்ளதால், இதன் சேவைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆனால், தற்போது அதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. கன்வீனியன்ஸ் கட்டணம் எனும் பயனாக்க கட்டணத்தை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. இதனை பல பயனர்களிடத்தில் நிறுவனம் சோதனை செய்துவருகிறது.

iOS 16: காசில்லாம ஆப்பிள் ஐபோன் வாங்கிக்கலாம்!

அதாவது, இதனை உறுதி செய்ய சில பயனர்கள் மொபைல் ரீசார்ஜ் செய்து பார்த்துள்ளனர். அவர்களுக்கு ரூ.1 முதல் ரூ.6 வரை பயனாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று காட்டப்பட்டுள்ளது.

கட்டணம் வசூலிக்கும் பேடிஎம்

முன்னதாக சில யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே கட்டணம் வசூலித்து சர்ச்சையில் சிக்கியது. தொடர்ந்து போன்பே நிறுவனம் தற்போது கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளது. ஆனால், எந்த அறிவிப்பு இல்லாமல் பேடிஎம் இந்த முறையை அமல்படுத்தியுள்ளது.

Moto G82 5G: அதிக சிறப்பம்சங்கள் கொண்ட பட்ஜெட் பிரண்ட்லி மோட்டோ 5ஜி போன் இன்று முதல்!

2019ஆம் ஆண்டில் பேடிஎம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “எந்த காரணங்களுக்காவும் டெபிட், கிரெடிட் கார்டுகள், UPI, வேலட் உள்ளடக்கிய எந்தவொரு கட்டண முறையைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த பயனாக்க அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையும் PAYTM வசூலிக்காது.” என்று தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பயனர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது இரட்டை வேடம் என பேடிஎம் நிறுவனத்தை வசைபாடி ட்வீட் செய்துள்ளனர். அன்று ஒரு பேச்சு; அப்படியா உல்டாவாக இன்று கட்டணம் வசூலிப்பு என்று குமுறுகின்றனர்.

Nothing Phone 1: நத்திங் ஸ்மார்ட்போன்; டெக்கிகளின் புதிய நம்பிக்கை!

வாடிக்கையாளர்கள் குமுறல்

போதும் டா சாமி.. இனி உங்கள் சேவையும் வேண்டாம்… ஒண்ணும் வேண்டாம் என சில பேடிஎம் வாடிக்கையாளர்கள் ட்வீட் செய்துள்ளனர். ‘Goodbye paytm’ என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

91 மொபைல்ஸ் Paytm செயலியைப் பயன்படுத்தி ரூ.148க்கான ஏர்டெல் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முயற்சித்தது. அதற்கு பயனாக்கக் கட்டணமாக ரூ.1 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்டெல்லின் விலையுயர்ந்த ரூ.3,359 ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முயற்சித்தபோது, ரூ.6 கட்டணம் கூடுதலாக காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.