ஜாலியோ ஜாலி.. வாரத்தில் 4 நாள் தான் பணி.. யாருக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கோ?

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். வாரத்தில் 3 நாள் விடுமுறை என்றால் என்ன சொல்லவா? இந்த அருமையான திட்டத்தினை இங்கிலாந்தில் உள்ள சில நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.

இந்த திட்டத்தில் 70 நிறுவனங்கள் மூலம் 3,300 ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த சோதனையானது அடுத்த 6 மாதங்கள் நடத்தப்படவுள்ளது.

ஜூன் 6ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் ஊழியர்கள் அவர்க்ளின் வழக்கமான சம்பளத்தினை பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தங்களது வழக்கமான பணி நேரத்தில் 80% நேரத்தில் பணி புரிவார்கள்.

180 ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்த நகைக்கடன் தரும் பிரபல நிறுவனம்!

100:80:100 மாதிரி

100:80:100 மாதிரி

இந்த சோதனையில் பங்கேற்கும் ஊழியர்கள் 100:80:100 மாதிரியின் படி, பணிபுரிவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்க்ள் தங்காளது சம்பளத்தில் 100% பெறுவார்கள். ஆனால் முந்தைய வேலை நேரத்தில் 80% நேரம் பணி புரிவார்கள். அதேசமயம் 100% உற்பத்தி திறனையும் பாரமரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் சோதனை

இங்கிலாந்தில் சோதனை

ஏற்கனவே இதனை சில நாடுகள் சோதனை நடத்தி, வெற்றிகரமாக முடிவினையும் கொடுத்துள்ளன. பல நாடுகளும் இதனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டிலும் வாரத்தில் 4 நாள் வேலை என்ற சோதனையை அந்த நாடு தொடங்கவுள்ளது.

நியூசிலாந்து நிறுவனம் பரிசோதனை
 

நியூசிலாந்து நிறுவனம் பரிசோதனை

இது குறித்து நியூசிலாந்து நிறுவனத்தின் தலைவர் ஒருவர், அதன் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 4 நாள் பணி திட்டத்தினை சோதனை செய்துள்ளார். அந்த காலகட்டத்தில் சம்பளம் குறைக்கப்படவில்லை. வேலையில் கூடுதல் நேரமும் இல்லை. அதேசமயம் நிறுவனத்திற்கு வருவாயும் சரியவில்லை என தெரிவித்துள்ளது. ஆக நிறுவனங்கள் இதனை நிராகரிக்கவும், முயற்சி செய்யாமல் இருக்கவுன்ம் எந்த காரணமும் இல்லை என கூறியுள்ளார்.

எந்தெந்த நிறுவனங்கள்

எந்தெந்த நிறுவனங்கள்

5 squirrels

Adzooma
AKA Case management
Allcap Limited
Amplitude
Bedrock Learning
Bookishy
boom studios
Charity bank
Comcen
Eurowagens
Everledger
Evolution money limited
Future Talent Learning
Girling Jones
Happy
Helping hands
hutch
IE Brand
Literal Humans
Loud Mouth media
merthyr Valley homes limited
MOX
NeatClean
Outcomes based Healthcare
outcomes first group
platten’s First and Chips
pressure drop brewing
Rivelin Robotics
ROyal Scociety of biology
salamandra.UK
Scotland’s international development Alliance
secure digital exchange ltd
sensat
sounds like these
stellar Asset Management
stemettes
The story mob
Timeberlake consultants ltd/TLKE Ltd
Trio Media
Tyler grange
Unity
waterwise
we are purposeful
yo telecom

ஊழியர்களுக்கு அழுத்தம் குறையலாம்

ஊழியர்களுக்கு அழுத்தம் குறையலாம்

இந்த சோதனையில் வெற்றி கண்டால் இங்கிலாந்தில் இந்த திட்டமானது அமல்படுத்தப்படலாம். இதன் மூலம் ஊழியர்களுக்கு அழுத்தம் குறையலாம். இது நிறுவனங்களுக்கு உற்பத்தி திறனை மேம்படுத்தும். எனினும் இந்த திட்டத்தின் மூலம் தினசரி 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் வாரத்திற்கு 48 மணி நேரம் ஊழியர்களுக்கு வேலை செய்ய வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

which companies are testing the 4 day week experiment in the UK?

3,300 employees from 70 companies across the UK have participated in the 4 days a week experiment

Story first published: Tuesday, June 7, 2022, 15:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.